வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Sunday, September 19, 2010

இணையத்தில் பணமீட்ட முதல் படி..

இன்று உலகில் நாளுக்கு நாள் பெருகி வரும் சனத்தொகை போல இணையத்தள பாவனையாளர்களும் நாளுக்கு நாள் பெருகிய படியே இருக்கின்றனர். இணையத்தளம் எனும் மாபெரும் சமூகத்தில் விற்பனை, கொள்முதல், லாபமீட்டல் போன்ற சகல ந‌டவடிக்கைகளும் தங்கு தடையின்றி தொடர்கின்றன. இச்சந்தையில் பணமீட்டுவதென்பது நமக்கும் சாத்தியமான விடயமே. அதற்கான நடைமுறைகள் மிகவும் சாத்தியமானதும் எளிதானதும் ஆகும். அவற்றை கற்றுதருவதே இந்த தளத்தின் நோக்கம் ஆகும்.

இணையத்தில் பணமீட்ட நமக்கு முதலாவதாக தேவையானது நாம் சம்பாதிக்கும் பணத்தை பெற்றுக்கொள்ள நமது பெயரில் உள்ள ஒன்லைன் அக்கவுன்ட் ஆகும். இந்த ஒன்லைன் அக்கவுன்டுகளிற்கு பணத்தை பெற்றுக்கொள்வதன் மூலமே நாம் அந்தப் பணத்தை செக் ஆகவோ அல்லது பணமாகவோ எமது வங்கிக்கணக்குக்கு பெற்றுக்கொள்ள முடியும். தற்பொழுது பல தளங்கள் இந்த ஒன்லைன் அக்கவுன்டுகளை இலவசமாக வழங்குகின்றன. 
உதாரணமாக‌

அலேர்ட் பே ("AlertPay")
பேய்பால்
மணிபுக்கர்ஸ் என்பவற்றை குறிப்பிடலாம்.

இதில் நாம் பரிந்துரைப்பது அலேர்ட்-பே ஆகும். இது இலகுவானதும் இலவசமானதும் ஆகும். எமது பணப்ப‌ரிமாற்றங்களின்போது உச்சகட்ட உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் இந்த தளம் வழங்குகின்றது.

அலெர்ட்-பே யில் அக்க‌வுண்ட் ஆரம்பிப்பது மிகபவும் இலகுவான செயல்முறை ஆகும். இதற்குத் தேவை நீங்கள் பாவிக்கும் ஒரு ஈ மெயில் முகவரி மாத்திரமே.

>> இங்கே கிளிக் செய்து வரும் வின்டோவில்
>> Sign up now என்பதை கிளிக் செய்யுங்கள்.
>> பின் Personal Pro என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து வரும் போர்மில் உங்களைப் பற்றிய சரியான தகவல்களை கொடுத்து  உங்களிற்கான‌  இலவச அலேர்டபே அக்கவுண்டை ரெஜிஸ்டர் செய்யுங்கள்

குறிப்பு: நீங்கள் பதிவு செய்யும் போது பெயர், விலாசம் போன்ற விடயங்களிற்கு முற்றிலும் ச‌ரியான விடயங்களை கொடுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் செக்காகவோ, பணமாகவோ மாற்றம் செய்யும் போது சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் அலெர்ட்‍‍பே கணக்கு ஆரம்பிக்கப்பட்ட பின்பு உங்கள் ஈ மெயில் முகவரியே உங்கள் அலெர்ட் பே முகவரியாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் வங்கிக் கணக்குக்கு ஒரு க‌ணக்கிலக்கம் இருப்பது போல உங்கள் அலெர்ட்-பே கணக்குக்கு நீங்கள் பதிவு செய்த ஈ மெயில் முகவரியே பயன்படுத்தப்படும்.

அலெர்ட் பே அக்கவுண்டில் உள்ள பணத்தை நீங்கள் செக் ஆகவோ அல்லது வங்கிக்கணக்குக்கு பணமாகவோ அல்லது ஒன்லைனில் வேறு பொருட்கள் சேவைகளை வாங்குவதற்காகவோ பயன்படுத்தலாம்.

எனவே தாமதிக்காமல் கீழுள்ள படத்தில் கிளிக் செய்து உங்களிற்கான இலவச அலேர்ட்பே அக்கவுண்டை பதிவு செய்யுங்கள்..
மேலும் சந்தேகங்கள், விளக்கங்கள் இருந்தால் கொம‌ன்ட்ஸ் பகுதியில் தெரிவிக்கவும்.

2 comments:

அசோக்.S said...

பதிவர் அவர்களுக்கு
உங்களுடைய பதிவின் மூலம் அலெர்ட்-பே இல் நான் ஒரு அக்கவுன்ட் ஓபன் பண்ணே முடிந்தது மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சுவராஷ்யமாய் இருக்கின்றன.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்..

பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: