வணக்கம்!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
உங்கள் ஓய்வு நேரத்தில் அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்த படியே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இலகுவான வழிமுறைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தருகிறது இந்த நெட்பணம் தளம். எமது பதிவுகளை தொடக்கத்தில் இருந்து முழுவதும் படிப்பதனூடாக நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

சம்பாதிப்பவர்கள்..

பே(f)ஸ்புக்கில் நாம்

Monday, October 18, 2010

செய்யுங்க செய்யாதீங்க....

எந்தவித பண முத‌லீடும் இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க உதவும் PTC சைடுகளை பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். எமக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ லிங்குகளை பார்வையிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவுவதே PTC தளங்கள் ஆகும்.
உலகெங்கிலும் பல இணைய பாவனையாளர்கள், வீட்டிலிருப்போர், மாணவர்கள், இல்லத்தரசிகள் என்போர் இத்தளங்களின் உதவியுடன் பணம் சம்பாதிப்பது நிதர்சனம் ஆகும். (PTC தளங்களில் பணம் சம்பாதிப்பது எப்படி என நீங்கள் அறிந்திருக்காவிட்டால் இப்பதிவினை படியுங்கள்)

PTC தளங்களில் நாம் பணம் சம்பாதிக்க எந்தவித முதலீடும் தேவையில்லை என்றாலும் சம்பாதிக்கும் தொகை ஆரம்பத்தில் சிறிதாகவே காணப்படுகிறது. எதுவுமே ஒரே இரவில் நடந்தேறி விடுவதில்லை. விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கு வழியாகும். சரி இவ் PTC தளங்களில் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அதிகம் சம்பாதிக்கவும் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.


செய்யாதிங்க...

01) ஒரு கணனியில் இரு அக்கவுண்ட்

ஒரு கணனியில் ஒரு அக்கவுண்டினையே திறத்தல் வேண்டும். அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சிலர் வேறு வேறு பெயர்களில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அக்கவுண்டுகளினை திறப்பார்கள். ஆனால் NeoBux போன்ற தளங்கள் இலகுவாக இக்குற்றத்தை கண்டுபிடித்துவிடுகின்றன. கண்டுபிடிக்கப்பட்டவுடன் உங்கள் சகல அக்கவுண்டும் எந்த வித முன்னறிவித்தலும் இல்லாமல் முடக்கப்பட்டுவிடும். எனவே ஒரு கணனியில் இரண்டு அக்கவுண்டுகள் திறப்பதை தவிருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வேறு யாராவது PTCயில் இணைய விரும்பினால் வேறு ஒரு கணனி ஒன்றை பாவித்தே இணைய வேண்டும்.

02) இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி வேண்டாம்.

நீங்கள் PTC லிங்குகளை பார்வையிட இன்ட‌ர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி பாவிப்பதை தவிருங்கள். ஏனெனில் இவை லிங்குகளை புதிய வின்டோவிலே திறக்கின்றன அத்துடன் சில தளங்களில் ஸ்கிரிப்டுகளினை தடை செய்வதன் மூலம் பார்க்க விடாமல் தடை செய்கின்றன. எனவே குறோம், பயர்பொக்ஸ் BROWSER பாவிப்பதே சிறந்தது..

03) NET சென்டர்களில் லொகின் செய்யாதீர்கள்.

பொதுவாக இன்டர்னெட் பிரோசிங் சென்டர்களில் லொகின் செய்து லிங்குகளை பார்வையிடாதீர்கள். இது உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படுவதற்கு வாய்ப்பாகிவிடும்.

04) 10 நாட்களில் 3கணனி

இது நியோபக்ஸ் தளத்தின் ஒரு விதியாகும். நீங்கள் தினமும் வேறு வேறு கணனிகளை பாவிப்பவர் ஆயின் 10 நாட்களில் 3ற்கு உட்பட்ட கணனிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். 3 ற்கு மேற்பட்ட கணனிகளை உபயோகித்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும் ‍ இது நியோபக்ஸ் தளத்தின் ஒரு விதியாகும்.


செய்யுங்க...

01) தினமும் குறித்த நேரத்தில் லிங்குகளை பர்வையிடுங்கள்.

நாளாந்தம் தவறாமல் லிங்குகளை பார்வையிடுங்கள். இதை தினமும் குறித்த ஒரு நேரத்தில் செய்வதன் மூலம் தவறாமல் லிங்குகளை பார்வை இடுவதனை தினந்தோறும் வழக்கப்படுத்திக்கொள்ளலாம். சிறுதுளி பெருவெள்ளம், விடாமுயற்சி வெற்றியை தரும்.

02)குறோம் சிற‌ந்தது..

PTC தளங்களை பார்வயிட குறோம் பிறவுசரே இலகுவானது. அல்லது பயர்பொக்ஸ் உகந்தது. இவை லிங்குகளினை ரப் களில் திறப்பதால் லிங்குகளை பார்வயிடுவது இலகுவானதாகும்.

இதை தவிர வேறு வேறு தளங்கள் தம‌க்கென வேறுபட்ட விதிமுறைகளை கொண்டுள்ளன. அவற்றினை அத்தளங்களின் Terms& Conditions பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தொடர்வோம்....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்..

பதிவுகளை தவறாமல் வாசிக்க மின்னஞ்சல் ஓடையில் பதிக..
Enter your email address: